Sunday, September 12, 2010

அத்தியாயம் -1: விருந்தாளி

ரேவதி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஒரு பத்திரிகையைப் ப்டித்துக் கொண்டிருந்தபோது மௌபைல் மணி அடித்தது.

"ஹலோ" என்று சொன்னாள் அவள், பத்திரிக்கை படித்துக் கொண்டே.

மறு முனையிலிருந்து, "நான் தான் பேசறேன்" என்றான் அவள் கணவன் சங்கர். "எங்க ஆபீஸிலே ரொம்ப நாள் ஸீனியர் மானேஜர் போஸ்டு காலியாக இருந்ததில்லே. இப்போ மாதவன்னு ஒருத்தர் ஜாய்ன் பண்ணியிருக்கார். அவர் இன்னைக்கி நைட் நம்ம வீட்டுக்கு டின்னருக்கு வர்றார்" என்றார்.

ரேவதி-சங்கர் வீட்டுக்கு அவ்வபோது விருந்தினர்கள் வருவது வழக்கம். சங்கர் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்வான பதவியில் இருந்ததால், நண்பர்களும் அலுவலக ரீதியாகத் தெரிந்தவர்களும் வருவார்கள்.

பொதுவாக விருந்தாளிகள் வருவதாக இருந்தால், சங்கர் ரேவதிக்கு முன்னுமே சொல்லிவிடுவான். சில சமயம் அவன் சொல்லாமலேயே திடீரென ஒருவரை இரவு விருந்துக்கு அழைத்து வரும்போது ரேவதி சிணுங்குவார். விருந்தினர் சென்றபிற்கு சங்கரை நன்றாகத் திட்டுவார், "திடீர்னு யாரையோ அழச்சுட்டு வந்திடுறீங்க இங்கே என்னமோ நான் ஹோட்டல் நடத்திட்டுருக்கிறது மாதிரி."

இப்படிபட்ட நேரங்களில் சங்கர் எதிர்த்துப் பேசாமல் மௌனமாக ஒரு சின்ன குழந்தை போல திட்டு வாங்குவான். "இனிமேல் சொல்லாமல் யாரையும் அழைத்து வர மாட்டேன்" என்று உருதி செய்வான் ஆனால் மீண்டும் வேறு வழியில்லாமல் முன்னமே அவளுக்குத் தெரிவிக்காமல் விருந்தினரை அழைத்து வருவான்.

இன்று முன்னுமே சொல்லிவிட்டதால், ரேவதி இரவு விருந்துக்கு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டாள்.

சங்கர் எட்டு மணிக்கு ஸீனியர் மானேஜ்ரை அழைத்து வருவேன் என்று சொல்லியிருந்ததால், ரேவதி அழகான சேலையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள். அவளது 18 வயது மகள் ஜான்வி மேல் மாடியில் தன் அறையில் ஏதோ ஒரு ப்ராஜெக்ட் வொர்க் செய்து கொண்டிருந்தாள்.

மணி அடித்ததும் ரேவதி சுறுசுறுப்பாகச் சென்று வீட்டுக் கதவைத் திறந்தாள். அவள் கணவன் பக்கத்தில் நின்றிருந்தவர் அவர் கல்லூரி காலத்து காதலன் என்பதைக் கண்டு அவள் கால்கள் நடுங்கின.

ஒரே நொடியில் அவள் மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிவிட்டன.

'இவர் பெயர்தான் ரவீந்திரன் என்று இருந்ததே, இப்பொழுது மாதவன் எப்படி ஆகிவிட்டது?' குழம்பினாள் ரேவதி. ஒருவேளை இவர் ரவீந்திரன் தோற்றத்துடன் இன்னொருவரா?

வந்தவர் "வணக்கங்க!" என்று சொல்லி நொடிக்கால நிசப்தத்தை உடைத்தார்.

அதே ரவீந்திரன் குரல். ரேவதிக்கு தலை சுற்றியது. 20 வருடங்கள் கழித்து இவர் மீண்டும் அவள் வாழ்க்கையில் நுழைந்து என்னென்ன் பூகம்பங்கள் உருவாகுமோ என்று பயந்தாள் ரேவதி.

"வாங்க, வாங்க", என்று ரேவதி சொல்ல, அவள் கணவனும் விருந்தாளியும் வீட்டினுள் நுழைந்தார்கள்.

2 comments:

  1. நன்றி.
    இந்த நாவலை இப்பொழுது wordpressக்கு மாற்றிவிட்டேன்:

    http://sikkal.wordpress.com/

    ReplyDelete